வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெய்ஜிங்: சீனாவில் சமீப காலமாக, மக்கள் தொகை குறைந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில், திருமணம் ஆகாதவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாண அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது அங்குள்ள மக்களுக்கு ஆபராக அமைந்து, குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் தொகை:
கடந்த, 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் மக்கள் தொகை கடுமையாக குறைந்துள்ளது. இதனால், உலகின் அதிக மக்கள் தொகை உடைய நாடு என்ற அந்தஸ்தை சீனா, இந்தாண்டு இந்தியாவிடம் இழக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி, அந்நாட்டின் மக்கள் தொகை, 141 கோடியாக உள்ளது.
இது, 2021 இறுதியில் கணக்கிடப்பட்ட மக்கள் தொகையை விட, 8.50 லட்சம் குறைவாக உள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டில், 1.1 கோடி இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 1950க்கு பின் குழந்தை பிறப்பு விகிதம் முதல்முறையாக குறைந்துள்ளது.
இறப்பு விகிதமும், வழக்கத்தை விட கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது என அந்நாட்டின் தேசிய புள்ளியியல் முகமை அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் எவ்வளவு குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்றும், திருமணம் ஆகாதவர்களுக்கு பிறந்த குழந்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படும் என்றும் சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாண அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அமலிலிருந்த ஒரு குழந்தை என்ற திட்டம் தளர்த்தப்பட்டது என்பதும் ஒரு தம்பதியினர் அதிகபட்சமாக மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள நாடு அனுமதி வழங்கி உள்ளது. இது சிச்சுவான் மக்களுக்கு ஆபராக அமைந்து, குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.