சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நியாயமாகவும், அமைதியாகவும் நடத்த வேண்டும் என மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்தக் கோரி தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுகவினர் மனு அளித்தனர். பின் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: இடைத்தேர்தல் நியாயமாகவும், அமைதியாகவும் நடத்த வேண்டும்.
வரும் 7ம் தேதி வரை காலம் உள்ளது. வேட்பாளர் யார் என்பதை சொல்வோம். களத்தில் நாங்கள் தான் இருக்கிறோம், நாங்கள்தான் வெல்வோம். முடிவுரைக்கு முடிவு எழுதுகிற வகையில் இடைத்தேர்தல் முடிவுக்கு இருக்கும். குறுக்கு வழியில் போலியான வெற்றி பெற திமுகவினர் முயற்சி செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.