பாலியல் வழக்கு: சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை

Added : ஜன 31, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
லக்னோ: குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம், அறக்கட்டளைகள் உள்ளன. சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. 2013ம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2018ம் ஆண்டு ஆசாராம்
Asaram Bapu, Life Imprisonment, Gandhi nagar Court, ஆசாராம் பாபு, ஆயுள் தண்டனை,  Sexual Assault Case,சாமியார்,

லக்னோ: குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம், அறக்கட்டளைகள் உள்ளன. சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. 2013ம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2018ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.இதனிடையே, குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் 2001 முதல் 2006 வரை தான் இருந்த நேரத்தில் சாமியார் ஆசாராம் பாபு தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சூரத்தைச் சேர்ந்த பெண், ஆமதாபாத்தில் உள்ள சந்த்கேடா போலீசில் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 2013ல் பதிவு செய்யப்பட்ட இந்த புகார் தொடர்பான வழக்கை குஜராத்தின் காந்தி நகரில் உள்ள கோர்ட் விசாரித்து வந்தது. பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு, அவரது மனைவி லட்சுமி, மகன் நாராயண் சாய், சாமியாரின் பக்தைகளாக கூறிக்கொண்ட 4 பெண்களும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என கோர்ட் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், சாமியாரின் மனைவி, மகன், 4 பெண் பக்தைகளுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று கூறிய அந்த 6 பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்தது. ஆசாராம் பாபுவுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து காந்திநகர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

Barakat Ali - Medan,இந்தோனேசியா
31-ஜன-202320:15:48 IST Report Abuse
Barakat Ali ஒரு அருட்தந்தையா இருந்திருந்தா பலரைத் தாயாக்கினாலும் மன்னிக்கப்பட்டிருப்பார் ....
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
31-ஜன-202319:56:25 IST Report Abuse
M  Ramachandran இதெல்லாம் தீர்ப்பாகாது . வேஷ கார பண்டாரத்திற்கு பண்ண வேலைக்கு தண்டனை வேண்டியது கட்டிங் தான்
Rate this:
Cancel
கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா
31-ஜன-202319:06:09 IST Report Abuse
கனோஜ் ஆங்ரே . எந்த மதத்திலும் யோக்கியனும் உண்டு, அயோக்கியனும் உண்டு. இந்த மதத்தில் உள்ளவன் அனைவரும் யோக்கியனுங்க...ன்னு சொல்றது அறிவீலித்தனம். எல்லா மதத்தில் உள்ளவர்களும் மனிதப் பிறவிகள்தானே... மதம் பார்த்தோ... சாதி பார்த்தோ... இனம் பார்த்தோ வருவதில்லை... இதுபோன்ற தீய எண்ணங்கள்... அததது வளர்ப்பும், சூழ்நிலையும் அப்படி...? அதுனால... எந்த மதத்தச் சேர்ந்தவன் தப்பு செய்தாலும், அது தப்பு என்பதை ஒத்துக் கொள்ளுங்க... இப்படி சொல்வதால், இந்து மதம் தவிர மற்ற மதங்களில் உள்ளவனுங்க எல்லாம் யோக்கியனுங்க இல்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X