நேரடியாக பங்குகளில் முதலீடு செய்வதை காட்டிலும், மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் மூலமாக மாதாந்திர முதலீட்டினை நீண்ட காலம் மேற்கொள்வது, கைநிறைய பணம் பார்க்க சிறந்ததொரு வழியாக முதலீட்டாளர்கள் பரிந்துரைக்கின்றனர். முதல் முறையாக மியூச்சுவல் பண்ட் எஸ்.ஐ.பி.,யில் பணம் போட நினைப்பவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
மியூச்சுவல் பண்ட் என்பது நம்மிடம் இருந்து நிறுவனம் பணத்தை பெற்று, பண்ட் மேனேஜர் ஒருவரை நியமித்து, அந்தப் பணத்தை வளர்ச்சி வாய்ப்புள்ள பல்வேறு பங்குகளில், பல்வேறு துறைகளில் முதலீடு செய்வார்கள். இதன் மூலம் நம் முதலீடு பெருகும். பண்ட் மேனேஜர் திறமையற்றவராக இருந்து, அவரது ஆராய்ச்சிகள், அதன் மூலமான கணிப்புகள் தவறினால் முதலீடு தேய்வதற்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனப் பங்குகளைக் கொண்ட மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் அதிக ரிஸ்க் கொண்டவை. அதே சமயம் அதிக ரிட்டர்ன் வழங்கிய பண்ட்களும் அவை தான்.
![]()
|
முதல் முறையாக மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் குறைந்த ரிஸ்க் கொண்ட திட்டங்களில் கவனம் செலுத்துவது நல்லது. பேலன்ஸ்ட் பண்ட் திட்டம் ஒன்று உள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தை மற்றும் கடன் பந்திரங்கள் கொண்ட கலவையாக இருக்கும். பங்குகள் சரிந்தால், கடன் பத்திரங்கள் பேலன்ஸ் செய்யும், அதுவே ரிவர்ஸாகவும் நடக்கும்.
எனவே ரிஸ்க் எடுக்கக் கூடிய நபர்களுக்கு 70% பங்குகள் மற்றும் 30% கடன் பத்திரங்கள் கொண்ட பேலன்ஸ்ட் திட்டங்களை நிதி ஆலோசகர்கள் பரிந்துரைக்கின்றனர். மிதமான ரிஸ்க் போதும் என்கிற முதலீட்டாளர்கள், பங்குகளில் 60% அல்லது கடன் பத்திரங்களில் 40% செல்லும் வகையிலான திட்டங்களை தேர்வு செய்யலாம். பின்னர் சம்பளம் உயரும் போது அதிக ரிஸ்க் எடுத்து முழுக்க பங்குசார்ந்த பண்ட்களில் முதலீட்டை அமைத்துக்கொள்ளலாம்.
தற்போது தொழில்நுட்பம் முதலீட்டை எளிதாக்கியுள்ளது, அனைத்தும் டிஜிட்டல் தளங்களில் கிடைக்கிறது. முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை டிஜிட்டல் முறையில் எளிதாக நிர்வகிக்கலாம், மீட்டெடுக்கலாம், மாற்றலாம். முதலீடு செய்ய விரும்பும் எவரும் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும். அப்போது தான் பவர் ஆப் காம்பவுன்டிங் எனும் கூட்டு வளர்ச்சியின் பலனை அனுபவிக்க முடியும்.