வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா: குடியுரிமை சட்டம் என்ற பெயரில் பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு மக்களை குழப்பி வருகிறது என மே. வங்க முதல்வர் மம்தா கூறியுள்ளார்.

இது குறி்த்து அவர் கூறியிருப்பதாவது: குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவது என்ற பெயரில் பாஜக தலைமையிலான மத்திய அரசு மக்களை குழப்பி வருகிறது. நாங்கள் நீண்ட காலமாக கவனித்து வருகிறோம்.
மே.வங்கத்திற்கு ஆப்கானிஸ்தான், மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஹிந்து, சீக்கியர், பௌத்தம் உள்ளிட்ட சமூகங்களைச் சேர்ந்த குடியேறுகின்றனர். இவர்களுக்கு குடியுரிமை சட்டம்(சிஏஏ) கீழ் குடியுரிமை வழங்க முடியவில்லை.

மேலும் அவர் பேசுகையில், வங்கத்திற்கு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் மத்திய அரசு கடன்பட்டுள்ளீர்கள். எங்களின் நிலுவைத் தொகையைக் கொடுங்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு வெளியிடவில்லை.
மேற்கு வங்கத்தின் மால்டா, முர்ஷிதாபாத் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நதி அரிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு "இந்த விஷயத்தைப் பார்ப்பதை நிறுத்திவிட்டது. நதிகள் அரிப்பைக் கட்டுப்படுத்துவதே இப்போது எங்களின் மிகப்பெரிய சவாலாகும். இதற்கு மத்திய அரசிடமிருந்து 700 கோடி ரூபாய் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.