வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்: குஜராத்தில் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை, 141 ஆக அதிகரித்துள்ளது. விபத்து தொடர்பாக பராமரிப்பு பணி மேற்கொண்ட 'ஒரெவா' நிறுவனர் இன்று சரணடைந்தார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் இருந்து, 300 கி.மீ., துாரத்தில் மோர்பி என்ற நகரில் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தில் தர்பங்கா - நஜார்பாக் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில், மச்சூ ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷ் காலத்திய தொங்கு பாலம் உள்ளது.
![]()
|
இது பழமையான பாலம் என்பதால் இதனை சீரமைத்து பராமரிக்கும் பணிகள் ஒரெவா என்ற ஒப்பந்த நிறுவனத்திற்கு 2037 வரை டெண்டர் விடப்பட்டது.விபத்து தொடர்பான வழக்கில், டெண்டர் எடுத்த ஒரேவா நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் ஜெய்சுக் பட்டேல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.