காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அடுத்த வெள்ளைகேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்து, கார், வேன், சரக்கு லாரி, கனரக வாகனம் என, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
மேம்பாலத்தை நெடுஞ்சாலைத் துறையினர் முறையாக பராமரிக்காததால், மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச் சுவரில், ஆலமரம் மற்றும் அரசமர செடிகள் வேரூன்றி செழித்து வளர்கின்றன. இதனால், சுவரில் விரிசல் ஏற்பட்டு பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.
எனவே, பாலத்தின் மீது வளர்ந்து வரும் செடிகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
Advertisement