வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
புதுடில்லி:விமான பயணத்தின் போது, 72 வயது பெண் மீது குடி போதையில் சிறுநீர் கழித்த வழக்கில் கைதாகியுள்ள சங்கர் மிஸ்ராவுக்கு' கோர்ட் ஜாமின் வழங்கியது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து, புதுடில்லி நோக்கி கடந்த ஆண்டு நவ., 26ல் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில், சங்கர் மிஸ்ரா என்பவர் பயணித்தார்.
அவர், விமானத்தில் மது அருந்தி போதையில், உடன் பயணித்த 72 வயது பெண் மீது சிறுநீர் கழித்தார். சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்கு பின், பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் வைரலானதையடுத்து சங்கர் மிஸ்ராவை புதுடில்லி போலீசார் கைது செய்தனர். அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது 'ஜாமின்' மனு டில்லி பாட்டியாலா கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஹர்ஜோத் சிங் பஹல்லா, ரூ. 1 லட்சம் பிணை வைப்பு செலுத்த உத்தரவிட்டு, ஜாமின் வழங்கினார்.
புதுடில்லி:விமான பயணத்தின் போது, 72 வயது பெண் மீது குடி போதையில் சிறுநீர் கழித்த வழக்கில் கைதாகியுள்ள சங்கர் மிஸ்ராவுக்கு' கோர்ட் ஜாமின் வழங்கியது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement