பழுதடைந்த நுாலக கட்டடம்
திருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம் ஊராட்சி வேணுகோபால கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள நுாலக கட்டடம் பழுதடைந்த நிலையில் உள்ளது.
இதனால் கட்டடம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. மாற்று கட்டடம் இதுவரை கட்டப்படாத நிலையில், வாசகர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் புத்தகங்களை படிக்க முடியாமல் விரக்தியில் உள்ளனர். எனவே, விரைவில் கட்டடத்தை சீரமைத்து, நுாலகம் பயன்பாட்டுக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வி.தமிழ்செல்வன், கனகம்மாசத்திரம்.
கற்கள் பெயர்ந்த சாலை
பூண்டி ஒன்றியம், எல்லப்பநாயுடுபேட்டை ஊராட்சியில் இருந்து, தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலை சேதமடைந்து கற்கள் சாலையாக காட்சியளிக்கிறது.
இந்த சாலை வழியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சென்று வரும் நிலையில், கற்கள் நிறைந்த சாலையாக உள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைத்து தார்ச்சாலையாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஓ.கோவிந்தராஜன், எல்லப்பநாயுடுபேட்டை.
Advertisement