அரண்வாயல்குப்பம்:சென்னை - திருப்பதி தேசிய நெடுங்சாலையில் அமைந்துள்ள அரண்வாயல்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா, 44. இவருக்கு வசந்தா, 40, என்ற மனைவியும், சந்தோஷ், 24, சஞ்சய், 21, என இரு மகன்களும் உள்ளனர்.
இவர், இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம், ஐந்து ஆண்டுகளாக பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கடையை பூட்டி விட்டு சென்ற இவர், நேற்று காலை கடையை திறக்க வந்தார்.
அப்போது கடையின் இரும்பு 'ஷட்டர்' உடைக்கப்பட்டிருந்ததை கண்டார். கடையின் உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் வைத்திருந்த 16 ஆயிரம் ரூபாய், கடையில் பொருத்தப்பட்டுடிருந்த 'சிசிடிவி' கேமரா மற்றும் அதன் சேமிப்பு கருவியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
இது குறித்து ராஜா அளித்த புகாரையடுத்து, செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Advertisement