கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில் 16வது ஒன்றியக் குழு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லதா, சாந்தி, துணைத் தலைவர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தார். கடம்பத்துார் ஒன்றிய குழுத் தலைவர் சுஜாதா தலைமை வகித்தார்.
கூட்டத்தில் முதலில் வரவு - செலவினங்கள் வாசிக்கப்பட்டன.
பின், கீழச்சேரி ஊராட்சியில் 30 லட்சத்தில் புதிய தார் சாலை மற்றும் கல்வெட்டு அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்டட்டது. அதை தொடர்ந்து, செஞ்சி ஊராட்சியில் 25 லட்சத்தில் தார் சாலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், 2022 - 23ம் ஆண்டு 15வது நிதிக்குழு மானியத்தில் 16.75 லட்சம் ரூபாயில், கடம்பத்துார், ஏகாட்டூர், விடையூர், புதுவள்ளூர், பாப்பரம்பாக்கம், வெங்கத்துார், நரசிங்கபுரம் உள்ளிட்ட 12 ஊராட்சிகளில் அங்கன்வாடி மைய கூரை மற்றும் சமையலறை சீரமைத்தல் பணிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதற்கான, வளர்ச்சி திட்ட பணிகளுக்கு, மொத்தம் 71.75 லட்சம் ரூபாய் ஆகும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
Advertisement