மதுராந்தகம்:மதுராந்தகத்தில் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து, உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், வந்தவாசி, செங்கல்பட்டு, சூணாம்பேடு, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தினமும் பள்ளி, கல்லுாரி, மாணவ - மாணவியர் மற்றும் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்வோர் என, ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில், பயணியரை அச்சுறுத்தும் வகையில், மின் கம்பம் ஒன்று, அடிப்பகுதியில் பாதி உடைந்த நிலையில் உள்ளது.
எனவே, மின் கம்பத்தால் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், அவற்றை சீரமைக்க, போக்குவரத்து பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.