மதுராந்தகம்:மதுராந்தகத்தில் நேற்று நடந்த நகராட்சி கூட்டத்திற்கு, நகர சபை தலைவர் மலர்விழி தலைமை தாங்கினார். நகராட்சியில் உள்ள 24 வார்டு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
மதுராந்தகம் நகராட்சியில் உள்ள தெரு விளக்குகளை எல்.இ.டி., விளக்குகளாக மாற்ற, 27 லட்சம் ரூபாயில் ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது.
மேலும், நகராட்சி பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய்கள் சிறிய அளவில் உள்ளதால், அவை துார்ந்து போய் உள்ளன.
எனவே, அவற்றை துார் வாரவும், மதுராந்தகம் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு முன், மினி குடிநீர் டேங்க் அமைத்து தரவும், வடிகால் மற்றும் சிறு பாலங்கள் அமைப்பது, அங்கன்வாடி மையங்களில் மேற்கூரை மாற்றுதல் உள்ளிட்ட வளர்ச்சி பணி திட்டங்கள் குறித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.