செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நடந்த, தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியின் நிறைவு விழா, நேற்று முன்தினம் நடந்தது.
செங்கல்பட்டு மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், 'ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி' என்ற தலைப்பில், அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி, கடந்த 29ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இவ்விழாவிற்கு, கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கி, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ - மாணவியரின் பரதம், நடனம், சிலம்பம், பாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு, சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார். இதில், அதிகாரிகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.