குரோம்பேட்டை:குரோம்பேட்டை ஸ்டேஷன் சாலையில், மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகள் உள்ளன.
இச்சாலையில், பொழிச்சலுாரைச் சேர்ந்த பாபு, 42, என்பவருக்குச் சொந்தமான 'மொபைல் போன்' சர்வீஸ் கடையில், தீ விபத்து ஏற்பட்டது.
சாலை குறுகலாக இருந்ததால், தீயணைப்பு வாகனம் உள்ளே செல்ல முடியாமல், அருகில் இருந்த கல்லுாரி வளாகத்தில் நின்று தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.
இந்த விபத்து குறித்து, சிட்லபாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.