சென்னை:கோயம்பேடு, 100 அடிசாலையிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாக, மத்திய குற்றப் பிரிவு விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
போலீசார் அந்த விடுதியை ரகசியமாக கண்காணித்து, பெண் போலீஸ் உதவியுடன் நேற்று சோதனை செய்தனர்.
அப்போது அங்கு, பாலியல் தொழிலுக்காக தங்க வைக்கப்பட்டு இருந்த இரு பெண்களை மீட்டு, அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இவர்களை பாலியல் தொழிலில் தள்ளிய ராமநாதபுரம் மாவட்டம், வெள்ளையாபுரத்தைச் சேர்ந்த சிவா, 29, கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், 39, ஆகியோரை கைது செய்துள்ளனர். இவர்களின் கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர்.