கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அக் ஷயா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், கவிஞர்கள் சங்கமம் விழா நடந்தது.
கோவை தெய்வீகத்தமிழ் அறக்கட்டளை மற்றும் உலக செம்மொழி பயிலரங்க மன்றம் இணைந்து நடத்திய, 140 கவிஞர்கள் சங்கமம் விழாவை, கல்லுாரி முதல்வர் ராஜசேகர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் கபிலன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இவ்விழாவில், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கலந்து கொண்டு பேசினார். தமிழகம் முழுவதும் இருந்து தமிழறிஞர்கள், கவிஞர்கள், சாதனையாளர்கள், நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
'ஆல் இந்தியா புக்ஸ் ஆப் கின்னஸ் ரெக்கார்ட்' வாயிலாக, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, 140 கவிஞர்களும் கவிதை எழுதி, அதே நாளன்று கவிதை தொகுப்பை வெளியிட்டு சாதனை படைத்தனர்.