விளையாட்டு மைதானம்: மாணவர்கள் கோரிக்கை

Added : ஜன 31, 2023 | |
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் அருகே பாணாம்பட்டில் பொது இடத்தில் விளையாடுவதை தடுப்போர் மீது நடவடிக்கை எடுத்து, விளையாட்டு மைதானம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பாணாம்பட்டைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:பாணாம்பட்டில் உள்ள கோவில்



விழுப்புரம் : விழுப்புரம் அருகே பாணாம்பட்டில் பொது இடத்தில் விளையாடுவதை தடுப்போர் மீது நடவடிக்கை எடுத்து, விளையாட்டு மைதானம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பாணாம்பட்டைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:

பாணாம்பட்டில் உள்ள கோவில் நிலத்தில், நாங்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடியும், உடற்பயிற்சி செய்தும் வருகிறோம். எங்கள் கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உடல் தகுதி அரசு பணிக்காக உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த கோவில் நிலத்தில், மாணவர்கள் விளையாடுவதையும், உடற் பயிற்சியில் ஈடுபடும் இளைஞர்களையும், தனி நபர் ஒருவர் தலையிட்டு, இடத்தை சேதப்படுத்தி வருகிறார்.

கோவில் நிலத்துக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லாத நிலையில், கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, இளைஞர்களை அந்த பொது இடத்தில் விளையாடக்கூடாது என விரட்டி வருகிறார்.

இதனால், அப்பகுதியில் தொடர்ந்து மாணவர்கள், இளைஞர்கள் விளையாடுவதற்கு அனுமதிக்கவும், தனிநபர் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், இளைஞர்களுக்கு தனியாக விளையாட்டு மைதானம் அமைத்து தரவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X