விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில் 26 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
கண்டாச்சிபுரம் தாசில்தார் ஆதிசக்தி சிவகுமரிமன்னன் விக்கிரவாண்டிக்கும், விழுப்புரம் கோட்ட கலால் அலுவலர் ராஜ்குமார் விழுப்புரத்திற்கும், வானுார் தனி தாசில்தார் கார்த்திகேயன் திருவெண்ணெய்நல்லுாருக்கும் இட மாற்றம் செய்யப்பட்டனர்.
கண்டாச்சிபுரம் தனி தாசில்தார் கற்பகம், கண்டாச்சிபுரம் தாசில்தாராகவும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடசுப்ரமணியன் திண்டிவனம் தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும், விழுப்புரம் நில எடுப்பு மற்றும் மேலாண்மை தேசிய நெடுஞ்சாலை தனி தாசில்தார் பாலமுருகன் மரக்காணம் தாசில்தாராகவும், விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார் விழுப்புரம் டாஸ்மாக் தனி தாசில்தாராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதே போன்று, மாவட்டத்தில் தாசில்தார் அளவிலான 26 அதிகாரிகளை இடமாற்றம் செய்து, கலெக்டர் மோகன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.