நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 3ம் ஆண்டு கும்பாபிஷேக ஆண்டு விழா மற்றும் வியாபாரிகளால் நடத்தப்படும் கடைவீதி திருவிழா வரும் 3ம் தேதி நடக்கிறது.
விழாவை முன்னிட்டு, அன்று காலை 10:00 மணிக்கு, விநாயகர் பூஜை, லட்சுமி பூஜை, வேள்வி ஆரம்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து அம்மனுக்கு கலச அபிஷேகம் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.
மதியம் 1:30 மணிக்கு, ரேணுகா பரமேஸ்வரி அம்மன் வீதியுலாவாக கடை வீதியில் உள்ள மண்டகப்படிக்கு சென்றடைகிறார். அங்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. இரவில், அம்மன் வீதி உலா நடக்கிறது.