புதுடில்லி:'பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக, தலைநகர் டில்லியின் ஜெய்லோர் வாலா பாக் பகுதியில், 1,675 அடுக்குமாடி வீடுகள் கட்டும் பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும்' என டி.டி.ஏ., கூறியுள்ளது.
இதுகுறித்து, டி.டி.ஏ., எனப்படும் டில்லி மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக டில்லி அசோக் விஹார் ஜெய்லோர்வாலா பாக்கில் 1,675 அடுக்குமாடி வீடுகள் கட்டப்படுகின்றன.
இந்தப் பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும். அதேபோல், குடிசைகளில் வசிப்போருக்காக கல்காஜியில் பூமிஹீன் முகாம் கட்டும் பணியும் நடந்து வருகிறது.
இது, டில்லி மேம்பாட்டு ஆணையத்தால் கட்டப்படும் முதல் மிகப்பெரும் மறுவாழ்வுத் திட்டம்.
மறுவாழ்வு திட்டத்தின் ஒரு பகுதியாக டில்லியில் புதிதாக கட்டப்பட்ட 3,024 அடுக்குமாடி வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.