கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு, டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் தலைமை தாங்கினார்.
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்லா முன்னிலை வகித்தார். டி.ஆர்.ஓ., நேர்முக உதவியாளர் ராஜராஜன் வரவேற்றார்.
வட்ட வழங்கல் அலுவலர்கள் வெங்கடேசன், கமலம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், சங்கராபுரம், சின்னசேலம் வட்டத்திற்குட்பட்ட நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த அருண் கென்னடி, சுப்ரமணி, மணி, மோகன், சம்பத், கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் முறையான கழிவறை வசதி, குடிநீர் வசதி முற்றிலுமாக இல்லை. மேலும் சிலிண்டர் வழங்கும் நிறுவனங்கள் அதன் உரிய விலையைவிட கூடுதலாக பணம் பெறுகின்றனர். அதனை தடுத்து நிறுத்திட வேண்டும்.
அத்துடன் நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் சிலிண்டரின் எடையை உறுதிசெய்யும் வகையில், டெலிவரிமேன்கள் எடைமிஷினை எடுத்து வரவேண்டும். சிலிண்டர் வாகனங்களில் அன்றைய சிலிண்டர் விலை பட்டியலை வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.