புதுடில்லி:புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
புதுடில்லி மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று அதிகாலை 12:05 மணிக்கு போன் அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர், 'முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்யப் போவதாக' கூறினார். இதையடுத்து, போலீசார் உஷார்படுத்தப்பட்டு, விசாரணை முடுக்கி விடப்பட்டது. அழைப்பு வந்த எண்ணில் பேசிய நபரை போலீசார் கண்டுபிடித்தனர். ஆனால், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டார். இருப்பினும், அந்த நபரை போலீசார் கண்காணித்துவ் வருகின்றனர்.