சோன்பத்ரா:உ.பி.,யின் சோன்பத்ரா மாவட்டம் ஷாகஞ்ச் நகரில் வசிக்கும் சுரேஷ் பியார்,28, ரோஹித் பியார்,20 ஆகிய இருவரும் ராபர்ட் ஸ்கஞ்ச் என்ற இடத்தில் இருந்து கோரவால் நகருக்கு பைக்கில் சென்றனர்.
அப்போது, எதிரில் வந்த கார் மோதியது. பலத்த காயம் அடைந்த இருவரும், மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மற்றொரு விபத்து
மீரட் மாவட்டம் பரிஷித்கர் நகரைச் சேர்ந்த கவுரவ்,21, வான்ஷ்,17 ஆகிய இருவரும் ஸ்கூட்டரில் சந்தைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். எதிரில் வந்த கார், பைக் மீது நேருக்கு நேர் மோதியது.
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்தனர்.