கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ் சங்கம், சின்னசேலம் தமிழ் சங்கம் இணைந்து முப்பெரும் விழா நடத்தினர்.
சின்னசேலம் அரிசி ஆலை அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை கெங்குசாமி நாயுடு பள்ளித் தலைவர் மாதவ சின்ராசு தலைமை தாங்கினார். சென்னை மாநகர தமிழ் சங்க தலைவர் பாரதி சுகுமாரன், திருவண்ணாமலை மாவட்ட தமிழ் சங்கத் தலைவர் இந்திரராஜன், சேலம் மாவட்ட முத்தமிழ் சங்கத் தலைவர் சந்திரன், கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ் சங்கத் தலைவர் இதயம் கிருஷ்ணா, சிறப்பு காப்பாளர் அம்பேத்கர் முன்னிலை வகித்தனர். முருகன் வாழ்த்துரை வழங்கினார். செயலாளர் கவிதைதம்பி வரவேற்றார்.
சின்னசேலம் தமிழ் சங்க காப்பாளர் டாக்டர் ரத்தினவேலு அண்ணாதுரை படத்தினை திறந்துவைத்து பேசினார். திரைப்பட இயக்குனர் முத்துராமன், சின்னசேலம் குணசேகரனா எழுதிய கவிதைநுாலை வெளியிட்டார். வேலுார் மாவட்ட தமிழ் படைப்பாளர் சங்கத் தலைவர் மோகன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
புதுச்சேரி பாரதிதாசன் பேரன் பாரதி, நுால் தொகுப்பாசிரியர் குணசேகரனாவுக்கு செங்குந்தர் குலத்திலகம் விருது வழங்கி கவுரவித்தார்.தொடர்ந்து திரைப்பட இயக்குனர் முத்துராமன் பள்ளி மாணவர்கள், துாய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கினார்.
கவிஞர்கள் ஆர்.தங்கராசு, எஸ்.தங்கராசு, கலைமணி, ஜெயராமன், விஜயராகவன், இளையராஜா, செந்தில்குமார், பாஸ்கரன், ஆறுமுகம், நாகராஜன், அனந்தகிருஷ்ணன், கருணாநிதி, நடராஜன், சந்திரன், சிவப்பிரகாசம், ராதாகிருஷ்ணன், பிரபாகரன் வாழ்த்துரை வழங்கினர். ஆறுமுகம் நன்றி கூறினார்.