உடுமலை:உடுமலை வக்கீல் நாகராஜன் வீதியில், சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவில் உள்ளது. கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிேஷக விழா, நாளை, 2ம் தேதி துவங்குகிறது.
நாளை காலை, 5.45 மணிக்கு மேல், கணபதி பூஜை, புண்யாஹவாசனம் உள்ளிட்ட பூஜைகளும், காலை, 7:30 மணிக்கு, கும்ப ஸ்தாபனம், மண்டப அர்ச்சனை, யாகசாலை பிரவேசம், வேத பாராயணம், முதற்கால பூஜை ேஹாமங்கள் நடக்கிறது.
மாலை, 5.30 மணிக்கு, அனைத்து மகிளா பஜனா மண்டலியினரின் விசேஷ பஜனை நடக்கிறது. வரும் 3ம் தேதி காலை, 5:00 மணிக்கு, ப்ரதிஷ்டா ேஹாமங்கள், காலை, 7:30 மணிக்கு, யாத்ராதானம், கடம் புறப்பாடு நடக்கிறது.
காலை, 7:30 மணிக்கு மேல், 8.45 மணிக்கு, மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு மேல், பிரசாத வினியோகம் நடக்கிறது.
ஏற்பாடுகளை ஹிந்து அறநிலையத்துறையினர் மற்றும் மத்வசேவா அமைப்பினர் செய்து வருகின்றனர்.