கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சியில் 30க்கும் மேற்பட்ட நபர்கள் மாவட்ட செயலாளர் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த அணைகரைகோட்டாலம் கிராமத்தை சேர்ந்த ஹரிஷ் உட்பட 30க்கும் மேற்பட்டோர், மாவட்ட செயலாளர் ஹரி முன்னிலையில் பா.ஜ., கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்.
புதிதாக கட்சியில் சேர்ந்த நபர்களுக்கு மாவட்ட செயலாளர் ஹரி சால்வை அணிவித்து வரவேற்றார்.தொடர்ந்து அகரகோட்டாலத்தில் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துதல், கட்சியினை பலப்படுத்துதல், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்த்தல், புதிய உறுப்பினர் சேர்க்கை, தேர்தல் பணிகளை மேற்கொள்ளுதல் குறித்து கலந்துரையாடினர்.