சென்னை, :சென்னை மாவட்டம் வலுத்துாக்கும் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான வலுத்துாக்கும் சாம்பியன்ஷிப் போட்டி, திருவொற்றியூரில் நடந்தது. இதில், இருபாலருக்கும் 'ஸ்குவாட், பெஞ்ச் பிரஸ்' மற்றும் டெட்லிப்ட் ஆகிய மூன்று போட்டிகள் நடத்தப்பட்டன.
இருபாலருக்கும் சப் - ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர், மாஸ்டர் உள்ளிட்ட பிரிவுகளில் பல்வேறு எடைப் பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. அதில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
அனைத்து போட்டிகளின் முடிவில், 'ஸ்ட்ராங் மேன்' பட்டங்களை, சீனியர் பிரிவில் அரும்பாக்கம் எம்.கே., ஜீம் பிரகாஷ், ஜூனியரில் சுல்தான், சப் - ஜூனியரில் பாடி சந்தோஷ் ஆகியோரும் வென்றனர்.
'ஸ்ட்ராங் விமன்' பட்டத்தை, சப் - ஜூனியரில் அய்யப்பன்தாங்கல் அக் ஷயா, ஜூனியரில் சுதா, சீனியரில் பூஜா உள்ளிட்டோரும் வென்றனர்.
மேலும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை, 142 புள்ளிகள் பெற்று அரும்பாக்கம் எம்.கே., உடற்பயிற்சி நிலையம் வென்றது. இரண்டாமிடத்தை, 123 புள்ளிகளில் பெரம்பூர் பேட் டூ பிட் உடற்பயிற்சி நிலையம் கைப்பற்றியது.