மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சி, 24 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், 12வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், அருணாங்குளம், திரு.வி.க., நகர், மோச்சேரி ரோடு ஆகிய பகுதிகளில் இருந்த, 124 குடும்பங்களின் வீடுகள், ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து, கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அகற்றப்பட்டன.
இந்நிலையில், அவர்களுக்கு மாற்று இடம் மற்றும் வாழ்வாதாரம் கருதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட மாம்பாக்கம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
நேற்று, மதுராந்தகம் வட்டாட்சியர் ராஜேஷ் தலைமையில், 124 குடும்பங்களுக்கும், இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதில், 12வது வார்டு நகரசபை உறுப்பினர் ஜெர்லின் ஜோஸ் மற்றும் பயனாளிகள் உடன் இருந்தனர்.