சென்னை, சென்னையில், தவறான வழியில் வாகனம் ஓட்டியது தொடர்பாக, 2,546 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3.81 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
சென்னையில் விபத்து குறைப்பு மற்றும் உயிரிழப்புகளை தடுக்க, போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகன ஓட்டிகள், ஒருவழிப்பாதை மற்றும் தவறான வழியில் செல்வதன் காரணமாக, விபத்துகள் ஏற்படுகின்றன.
இதை தடுப்பதற்காக, சென்னையில் போலீசார் நேற்று நடத்திய வாகன சோதனையில், தவறான வழியில் வாகனம் ஓட்டிய 2,546 பேர் சிக்கினர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, 3.81 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.