சென்னை :சோழிங்கநல்லுார் - சிப்காட்; சி.எம்.பி.டி., - சோழிங்கநல்லுார் இடையே, 404.45 கோடி ரூபாய் மதிப்பில் மெட்ரோ ரயில் பணி மேற்கொள்ள, சி.எம்.ஆர்.எல்., எனப்படும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 'லின்க்சன் இந்தியா' நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
'டெண்டர்' வாயிலாக நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, பணிக்கான ஆணையும் வழங்கப்பட்டு வருகின்றன.
சோழிங்கநல்லுாரில் இருந்து சிப்காட்; சி.எம்.பி.டி.,யில் இருந்து சோழிங்கநல்லுார் இடையே, 404.45 கோடி ரூபாய் மதிப்பில் மெட்ரோ ரயில் பணி மேற்கொள்ள, லின்க்சன் இந்தியா நிறுவனத்துடன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி, வின்க்சன் இந்தியா பிரைவேட் நிறுவன இயக்குனர் யாசிர் ஹமீத் ஷா ஆகியோர், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதன்படி, சோழிங்கநல்லுார் - சிப்காட் வரையில், 9.38 கி.மீ., துாரத்திற்கு மேம்பால பாதையில் ஒன்பது ரயில் நிலையங்கள், சி.எம்.பி.டி., முதல் சோழிங்கநல்லுார் வரையில், 29 கி.மீ., துாரத்திற்கு, 28 மேம்பால மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கும் பணிகளை லின்க்சன் இந்தியா நிறுவனம் மேற்கொள்ளும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.