பொள்ளாச்சி:கிணத்துக்கடவில், பா.ஜ., சார்பில், மத்திய அரசின் காப்பீடு திட்ட முகாம் நடந்தது.
பா.ஜ.,வின் மத்திய அரசு நலத்திட்டம் மற்றும் தரவு மேலாண்மை பிரிவு சார்பில், காப்பீடு திட்ட சிறப்பு முகாம், கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்தது. இதை, கோவை தெற்கு மாவட்ட, பா.ஜ., தலைவர் வசந்தராஜன் துவங்கி வைத்தார்.
இதில், ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம், தபால் துறையின் செல்வமகள் சேமிப்பு திட்டம் உட்பட, மத்திய அரசின் சேவைகளில் பொதுமக்கள், புதிதாக இணைக்கப்பட்டனர். மொத்தம், 2,500க்கும் மேற்பட்ட புதிய பயனாளிகள், ஒன்பது திட்டங்களில் இணைந்தனர்.
இதனுடன், பெண்களுக்கான இலவச சட்ட பாதுகாப்பு மற்றும் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.