சென்னை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள இரவுக் காவலர் பணியிடத்திற்கு, சென்னையில் வசிப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவில், சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், இரவுக் காவலர் பணி காலியாக உள்ளது.
இதற்கு, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குறைந்தபட்சம் 18 வயது முதல் பொதுப்பிரிவு 32, பிற்படுத்தப்பட்டோர் 34, தாழ்த்தப்பட்டோர் 37 வயதுக்கும் மிகாமல் இருக்க வேண்டும்.
அரசு மருத்துவரிடம் உரிய உடற்தகுதி சான்று பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புவோர், பிப்., 1 முதல் 15ம் தேதிக்குள், கிண்டியில் உள்ள துணை இயக்குனர், தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.