புதுமாவிலங்கை:திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது புதுமாவிலங்கை ஊராட்சிக்குட்பட்ட அகரம்.
இந்த ஊராட்சி வழியே, தினமும் அரசு, தனியார், தொழிற்சாலை பேருந்துகள், கனரக வாகனங்கள் என 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பகுதி மக்கள் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள், பகல் நேரங்களில், நெடுஞ்சாலையில் சுற்றித் திரிவதால் நெடுஞ்சாலை ஒருவழிப் பாதையாக மாறியுள்ளது.
இதனால் வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்படுவதோடு சில நேரங்களில் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி., உத்தரவிட்டும் நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகள் குறித்து அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்காதது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.