கஞ்சா வியாபாரிகள் இருவருக்கு 12 ஆண்டு சிறை!

Updated : பிப் 03, 2023 | Added : ஜன 31, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: சென்னையில் கஞ்சா வியாபாரிகள் இருவருக்கு, தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, மாதவரம் -மூலக்கடை நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லுாரி அருகே, கஞ்சா கடத்தி வரப்படுவதாக, 2019 ஜூலை 21ல், சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய
கஞ்சா, வியாபாரிகள், சிறை

சென்னை: சென்னையில் கஞ்சா வியாபாரிகள் இருவருக்கு, தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, மாதவரம் -மூலக்கடை நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லுாரி அருகே, கஞ்சா கடத்தி வரப்படுவதாக, 2019 ஜூலை 21ல், சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதையடுத்து, மாதவரம்- மூலக்கடை நெடுஞ்சாலையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


பறிமுதல்



அப்போது, சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். ஆட்டோவில் அமர்ந்திருந்தவரின் அருகே, இரண்டு 'ரோஸ்' நிற பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.

அந்த பையை பிரித்து பார்த்தபோது, 50 கிராம் பாக்கெட்டுகளாக, தலா 20 கிலோ எடையுள்ள கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டறிந்தனர்.சென்னை, அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் உதயகுமார், 31, தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த கோட்டைசாமி, 53, ஆகிய இருவரும் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

அதையடுத்து, இருவர் மீதும் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இரண்டு பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு விசாரணை, சென்னையில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருமகள் முன் நடந்து வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'இரண்டு பேரையும் திட்டமிட்டு கைது செய்துள்ளனர்; கஞ்சா பறிமுதல் நடவடிக்கை என்பது போலியானது. போலீசார், சட்ட விதிகளை பின்பற்றவில்லை' என வாதிட்டனர்.


சந்தேகம்



போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜே.சரவணன் ஆஜராகி, ''ஆந்திர மாநிலத்தில் இருந்து, அடிக்கடி கஞ்சா கடத்தி வருவது கோட்டைசாமியின் வழக்கம். அப்படி கடத்தி வந்த கஞ்சாவை, உதயகுமாரின் ஆட்டோவில் எடுத்துச் சென்றுள்ளார். ''மாதவரத்தில் இருந்து எழும்பூர் செல்ல, டிரைவருக்கு கோட்டைசாமி 1,000 ரூபாய் வரை கொடுத்து வந்துள்ளார். கஞ்சா கடத்தல் குறித்து, டிரைவருக்கு நன்கு தெரியும்,'' என, வாதிட்டார்.


இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு:


வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேர் மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பு நிரூபித்துள்ளது. வேறு எந்தவொரு வழக்கும் இரண்டு பேர் மீதும் இல்லை. இருப்பினும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த கஞ்சாவின் அளவு, வணிக ரீதியிலானது; அது, சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.


அபராதம்



எனவே, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ், இரண்டு பிரிவுகளில் ஆட்டோ டிரைவருக்கு தலா, 12 ஆண்டுகளும், ஒரு பிரிவில் ஐந்து ஆண்டுகளும், அபராதமாக 2.90 லட்சம் ரூபாயும் விதிக்கப்படுகிறது. கோட்டைசாமிக்கு ஒரு பிரிவில் 12 ஆண்டுகளும், மற்றொரு பிரிவில் ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 1.70 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. இரண்டு பேருக்கும் அபராதமாக மொத்தம் 4.60 லட்சம் ரூபாய் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை ஏக காலத்தில் இருவரும் அனுபவிக்க வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X