கோவை:தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில்இருந்து, திறமையான கிரிக்கெட் வீரர்களை கண்டறிய, தமிழகம் முழுவதும், 13 இடங்களில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தேர்வு, 14 வயது முதல் 24 வயது வரையுள்ள வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நடத்தப்படுகிறது.
கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்ட வீரர்களுக்கான தேர்வு, கோவை நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது.
வரும் 11ம் தேதி வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், 12ம் தேதி சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் தேர்வு நடக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில், 'கம்பைண்டு டிஸ்ட்ரிக்ட்' (ஒருங்கிணைந்த மாவட்டங்கள்) போட்டியில் பங்கேற்காத வீரர்கள் இத்தேர்வில் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்பும் வீரர்கள், விண்ணப்ப படிவங்களை கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
வீரர்கள் தேர்வு நடக்கும் நாள் காலை, 8:00 மணிக்கு, வெள்ளை 'டீ சர்ட்' மற்றும் 'கலர் டிராக்' அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வாகும் வீரர்களுக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பயிற்சியாளர்கள் இலவச பயிற்சி வழங்கவுள்ளனர். மேலும் விவரங்களுக்கு, 80729 48889 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.