தேனி : தேனி மாவட்ட டி.ஆர்.ஓ., சுப்பிரமணியன் 60, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக ஏற்பாடு செய்த நிலையில், நேற்று முன்தினம் சென்னை தனியார் மருத்துவமனையில் இறந்தார்.
இவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர். குடும்பத்தினருடன் சேலம் சின்னத்திருப்பதியில் வசித்தனர். உடல்நலம் பாதித்து சிகிச்சைக்காக, ஜன.,2ல் மருத்துவ விடுப்பில் சென்றார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னை குரோம்பேட்டையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சைக்கு முன் மஞ்சள்காமாலை பாதிப்பால் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு கலெக்டர் முரளீதரன், அரசு அலுவலர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.