பாக்., மசூதி தற்கொலை படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு

Updated : பிப் 01, 2023 | Added : பிப் 01, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
பெஷாவர் பாகிஸ்தான் மசூதியில், நேற்று முன்தினம் மதிய வேளை தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் ௬௧ பேர் பலியாகி இருந்த நிலையில்,நேற்று பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், வடமேற்கு பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பெஷாவர் நகரில், பல அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கூடிய ஒரு மசூதியில், நேற்று முன்தினம் மதிய வேளை தொழுகை
 பாக்., மசூதி தற்கொலை , தாக்குதல்,100 பலிபெஷாவர் பாகிஸ்தான் மசூதியில், நேற்று முன்தினம் மதிய வேளை தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் ௬௧ பேர் பலியாகி இருந்த நிலையில்,நேற்று பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில், வடமேற்கு பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பெஷாவர் நகரில், பல அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கூடிய ஒரு மசூதியில், நேற்று முன்தினம் மதிய வேளை தொழுகை நடைபெற்றது.

இதில், ஏராளமான போலீசார், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, திடீரென நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில், ௬௧ பேர் பரிதாபமாக பலியாகினர்.

ஏராளமானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மசூதியின் ஒரு பகுதி கடும் சேதமடைந்தது.

இதையடுத்து, அங்கு மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏராளமானோர் மீட்கப்பட்டு வருகின்றனர். இதில், பலர் இறந்துவிட்டதால், நேற்று வரை பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

பலத்த காயமடைந்த ௨௨௧ பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலில், மசூதியின் இமாமும் கொல்லப்பட்டார். இது குறித்து, அந்நாட்டு போலீசார் வழக்குப் பதிந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, இந்த சம்பவத்துக்கு, பாகிஸ்தான் தலிபான் என்றழைக்கப்படும், தெஹ்ரீக் தலிபான் பாகிஸ்தான் என்ற அல் குவைதா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


latest tamil news


தங்கள் அமைப்பின் கமாண்டர் உமர் காலித் குரசானி, கடந்த ஆகஸ்ட்டில் கொல்லப்பட்டதற்கு, பழிக்குப்பழி நடவடிக்கை என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தெஹ்ரீக் தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர், கடந்த ௨௦௦௮ல் இஸ்லாமாபாதில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தாக்குதல் நடத்தியது. ௨௦௦௯ல் ராணுவ தலைமையகம் மீது தாக்குதல் நடத்தியது.

தொடர்ந்து, ௨௦௧௪ல் ராணுவப் பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதலில், ௧௩௧ மாணவ - மாணவியர் உட்பட மொத்தம் ௧௫௦ பேர் பலியானது உலகையே அதிரச் செய்தது.

தலை கண்டெடுப்பு

மசூதியில், போலீசார், பாதுகாப்புப் படையினர் முன்வரிசையில் இருந்து தொழுகை நடத்தினர். இவர்களுக்கு முன்னதாகவே சென்று, சந்தேகத்துக்குரிய மனித வெடிகுண்டு நபர் நின்றுள்ளார். அங்கிருந்து வெடிகுண்டை வெடிக்கச் செய்ததால், ஏராளமான போலீசார், பாதுகாப்புப் படையினர் பலியாகி உள்ளனர்.குண்டு வெடிப்பிற்குப் பின் சந்தேகத்துக்குரிய நபரின் தலை மட்டும் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ''பலத்த பாதுகாப்பு உள்ள இந்த மசூதிக்குள், மர்ம நபர் போலீஸ் அதிகாரிகளின் வாகனத்தை பயன்படுத்தி நுழைந்திருக்க வேண்டும்,'' என, போலீஸ் அதிகாரி முகம்மது அஜிஸ் கான் தெரிவித்தார்.Advertisement
வாசகர் கருத்து (7)

01-பிப்-202312:27:00 IST Report Abuse
aaruthirumalai ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசில அடிமடியிலேயே கைய வைச்சிட்டீங்களே.....
Rate this:
Cancel
01-பிப்-202308:48:15 IST Report Abuse
அப்புசாமி உயிரோட இருக்குறவங்களை அல்லாஹ் காப்பாத்திட்டாரு.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
01-பிப்-202307:15:43 IST Report Abuse
Kasimani Baskaran இராணுவமும், போலீசும் கூட தீவிரவாத ஆதரவு... பிறகு எப்படி உருப்படும். போதாக்குறைக்கு தலிபான்கள் வேறு இடையில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.. பாக்கிஸ்தான்தான் அடுத்த சிரியா. இந்தியா இப்பொழுதே விழித்துக்கொள்ளவில்லை என்றால் இந்தியாவுக்குத்தான் தலைவலி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X