வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்த 2022 - 2023ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் வருவாய் ஆதாரங்களை பெருக்குவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகம், தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்கள், சொத்து வரியை திருத்தி அமைத்தன. இதன் வாயிலாக மாநிலத்துக்கான வருவாய் உயர்ந்துள்ளது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஹரியானா, கேரளா, அசாம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச அரசுகள், மின்சார கட்டணத்தை உயர்த்தின. இதன் வாயிலாக கூடுதல் வருவாய் ஆதாரம் கிடைத்து உள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாநிலங்களின் செலவீனம் அதிகரித்தது. இதனால் வருவாய் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டன. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சில நிதியுதவிகளை செய்தாலும், இந்த மாநிலங்கள் தங்களுடைய வருவாய் ஆதாரங்களை உயர்த்தி கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
![]()
|
உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களின் மதுபான கொள்கையை திருத்தின. லைசென்ஸ் கட்டணம், புதுப்பித்தல் கட்டணம், பரிசீலனை கட்டணம், பதிவுக் கட்டணம் உயர்த்தப்பட்டன. இதன் வாயிலாக கணிசமான வருவாய் மாநில அரசுக்கு கிடைத்தது.
இதைத் தவிர பல மாநிலங்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கின. மேலும் சொத்துக்களை பணமாக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இதுவும் வருவாய் ஆதாரம் பெருகுவதற்கு மாநிலங்களுக்கு உதவின. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.