வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழுக்கு எழுதிய கடிதம்:
என்.வைகைவளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'திராவிடர் கழக தலைவர், கி.வீரமணி மீது யாராவது கைவைத்தால், நான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். வீரமணி மீது கை வைத்தவனின், கையை வெட்டுவேன்' என, பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார், தி.மு.க., - எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு.
'அரசியல்வாதிகளுக்கு, மானம், சூடு, சொரணை எதுவுமே இருக்கக்கூடாது' என, வெளிப்படையாக பேசி, பெரும் புரட்சி செய்தவரும் இவரே. அத்துடன் தன் தொகுதியில், ஜி.எஸ்.டி., ரோட்டில் இருந்த, சரஸ்வதி, லட்சுமி, பார்வதி போன்ற தெய்வங்களின் கோவில்களை இடித்து தரை மட்டமாக்கினாராம். கோவில்களை இடித்த தன்னை, ஹிந்துக் கடவுள்கள் எதுவும் செய்யவில்லை என்றும், தன் வீர தீர பராக்கிரம செயல்களை பட்டியலிட்டுள்ளார்.
'கோவில்களை இடித்தால், ஓட்டுகள் வராது என்று, எனக்கு தெரியும். அந்த ஓட்டுகளை எப்படி எனக்கு விழவைக்க வேண்டும் என்பதும் தெரியும்' என்றும்,திருவாய் மலர்ந்திருக்கிறார் பாலு. மேலும், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றி இருந்தால், இந்தியாவுக்கு கோடி கோடியாக வருமானம் கிடைத்திருக்கும் என்று கூறியுள்ளார்.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்காக செலவிட்ட, 6,000 கோடி ரூபாய் பாழாய் போனது தான் மிச்சம் என்பதை, இவர் வேண்டுமானால் சுலபமாக மறந்து இருக்கலாம்; நம்மால் மறக்க முடியுமா?
![]()
|
சமீப நாட்களாக, தி.மு.க., அமைச்சர்கள் தான், அடிதடிகளில் இறங்கி அசிங்கப்பட்டிருக்கின்றனர் என்றால், இப்போது, தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலுவும், 'கையை வெட்டுவேன், காலை வெட்டுவேன்' என்று மேடையிலேயே பகிரங்கமாக பேசி சவால் விடும் அளவுக்கு துணிந்து விட்டார். இது, திராவிட செம்மல்களின் வன்முறை கலாசாரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது.
தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, நிம்மதியாக துாங்க விடாமல் செய்ய வேண்டும் என்று, சபதம் எடுத்து, தி.மு.க., அமைச்சர்களும், எம்.பி.,க்களும், இப்படி தரக் குறைவாகப் பேசி, சர்ச்சையை கிளப்புகின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது. தி.மு.க., ஆட்சியில்,பேச்சு சுதந்திரம் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போயிருக்கிறது என்பதற்கான அடையாளம் தான், டி.ஆர்.பாலுவின் பேச்சு.
Advertisement