''பெண் அதிகாரி பேரை சொன்னாலே, ஊழியர்கள் நடுங்கறா ஓய்...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''என்ன விவகாரம்னு விபரமா சொல்லும் வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''திருத்தணி முருகன் கோவில் பெண் அதிகாரி ரொம்பவே கண்டிப்பானவங்க... கோவில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை, தன் மொபைல் போன்ல கவனிச்சுண்டே இருப்பாங்க ஓய்...
![]()
|
''தப்பு செய்ற ஊழியர்கள் மேல உடனடியா நடவடிக்கை பாயறது... இதுவரை, 13 பேர், 'சஸ்பெண்ட்' ஆகியிருக்கா... சமீபத்துல, பக்தர்களோட கட்டண டிக்கெட்டை, 'ஸ்கேன்' செய்யலன்னு, ரெண்டு ஊழியர்களுக்கு ஆயிரக்கணக்குல அபராதம் போட்டாங்க ஓய்...
''சிக்னல் சரியா இல்லாததால ஒரு டிக்கெட்டை ஸ்கேன் செய்ய, 15 நிமிஷத்துக்கு மேல ஆறது... அதை சொன்னா, 'மரியாதையா அபராதம் கட்டறியா... இல்ல சஸ்பெண்ட் செய்யவா'ன்னு அதட்டியிருக்காங்க... வேற வழி இல்லாம, ஒன்றரை மாச சம்பளத்தை அபராதமா கட்டியிருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.