Anti-superstition conference in Trichy: Tamil Nadu BJP urges ban | திருச்சியில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு: தடை விதிக்க தமிழக பா.ஜ., வலியுறுத்தல்| Dinamalar

திருச்சியில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு: தடை விதிக்க தமிழக பா.ஜ., வலியுறுத்தல்

Added : பிப் 01, 2023 | கருத்துகள் (42) | |
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பு, பிப்., 5ல் திருச்சி சிறுகனுாரில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு நடத்துகிறது. இதில் பல லட்சம் பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.மாநாடு மேடை மற்றும் பார்வையாளர்கள் அமர்வதற்கு 100 ஏக்கர் நிலம் வாடகைக்கு எடுக்கப்பட்டு செப்பனிடப்படுகிறது. கழிப்பறை வசதி மற்றும் வாகனம் நிறுத்துவதற்காக கூடுதலாக, 50 ஏக்கர் நிலம் வாடகைக்கு எடுக்கப்பட்டு,
Anti-superstition conference in Trichy: Tamil Nadu BJP urges ban  திருச்சியில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு: தடை விதிக்க தமிழக பா.ஜ., வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பு, பிப்., 5ல் திருச்சி சிறுகனுாரில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு நடத்துகிறது. இதில் பல லட்சம் பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாடு மேடை மற்றும் பார்வையாளர்கள் அமர்வதற்கு 100 ஏக்கர் நிலம் வாடகைக்கு எடுக்கப்பட்டு செப்பனிடப்படுகிறது. கழிப்பறை வசதி மற்றும் வாகனம் நிறுத்துவதற்காக கூடுதலாக, 50 ஏக்கர் நிலம் வாடகைக்கு எடுக்கப்பட்டு, அதற்கான பணியும் நடந்து வருகிறது.

இந்நிலையில், 'இப்படியொரு மாநாடு நடத்துவது மாநில அமைதிக்கு பங்கம் விளைவிக்கும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடும்.

'தங்கள் மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்கான மாநாடு என்று ஒன்று கூடி, தீவிரவாதத்தை விளைவிக்க முயற்சி எடுப்பர். எனவே, மாநாட்டின் நோக்கத்தை புரிந்து, அதை தடுக்க வேண்டும்' என, பா.ஜ., செயற்குழு உறுப்பினரும், சிந்தனையாளர் பிரிவு பார்வையாளருமான கல்யாணராமன், அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு அக்., 23ல், கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் ஜமேஷா முபின் என்ற பயங்கரவாதி, காரில் சிலிண்டர் வெடிகுண்டை ஏற்றிச் சென்றபோது, அது வெடித்து சிதறியது. ஜமேஷா முபின், உடல் துண்டு துண்டாகி இறந்து போனார்.

விசாரணையில் ஈடுபட்ட என்.ஐ.ஏ., அதிகாரிகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பலரையும் கைது செய்தனர். ஜமேஷா முபின், இலங்கை தவ்ஹித் ஜமாத் அமைப்பை சேர்ந்த ஜாக்ரன் ஹாஸ்மியோடு தொடர்புடையவர் என்பது கண்டறியப்பட்டது.

இந்த ஜாக்ரன் ஹாஸ்மி தான், இலங்கையில் ஈஸ்டர் நாளில் தேவாலயத்தில் வெடிகுண்டு வைத்து, 200க்கும் அதிகமானோரை கொன்றவர். இப்படிப்பட்ட பலரும், தமிழகம் மற்றும் இந்தியாவில் செயல்படும் இயக்கங்கள் பலவற்றோடும் தொடர்பில் உள்ளனர்.

இந்த சூழலில், தமிழக தவ்ஹித் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள், 'மூடநம்பிக்கை ஒழிப்பு' என்ற பெயரில் திருச்சி சிறுகனுாரில் மாநாடு நடத்துகின்றனர். அந்த மாநாட்டுக்கு, சித்தார்த்தன் என்பவரிடம் இருந்து நிலம் பெற்று உள்ளனர்.

அந்த நிலத்தை வாங்கி கொடுத்தவர், அமைச்சர் நேரு. இதற்காக, சித்தார்த்தனுடன் தவ்ஹித் ஜமாத் அமைப்பினர், நேரு முன்னிலையில் ஒப்பந்தம் போட்டுள்ளனர்.

மாநாட்டின் வாயிலாக, முஸ்லிம் மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளை ஒழிக்க போவதாக கூறினாலும், அங்கே பயங்கரவாத கோஷத்தைதான் வலியுறுத்துவர் என்பது எல்லாரும் அறிந்ததுதான்.

இது அரசுக்கும் தெரியும். இருந்தும், மாநாட்டுக்கு இடம் வாங்கி கொடுப்பது உள்ளிட்ட எல்லா பணிகளுக்கும் அமைச்சர் ஒருவரே உதவுகிறார் என்றால், அரசு தரப்பில் உதவுவதாக தானே அர்த்தம். அதனால்தான், இந்த மாநாட்டுக்கு தடை விதிக்க வலியுறுத்தி, அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news

'அமைச்சரை கொச்சைப்படுத்துவதா?'


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் செய்தி தொடர்பாளர் அல் அமீன் கூறியதாவது: வரதட்சணை, பெண் கல்வி உள்ளிட்ட பல விஷயங்களில், முஸ்லிம் மதத்தை பின்பற்றும் மக்களிடையே நிலவும் மூட நம்பிக்கையை போக்கும் விதமாக நடத்தப்படும் மாநாட்டால் யாருக்கு என்ன சங்கடம்?சட்ட ரீதியில் தான் மாநாடு நடத்துகிறோம். அதற்காக, தனியாரிடம் இருந்து நிலம் உரிய முறையில் பெறப்பட்டுள்ளது; ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.


அமைச்சர் நேருவிடம் மாநாட்டுக்கு உதவ கோரினோம். அவரும் சில உதவிகளை செய்துள்ளார். அதற்காக, அவரை கொச்சைப்படுத்தி பேசுவதும், சர்ச்சையில் இழுத்து விட நினைப்பதும் தவறு.முஸ்லிம் இயக்கங்கள் என்றாலே, தீவிரவாத செயல்பாடுகளுக்கு துணையாக நிற்கும் என்பது, பா.ஜ., தரப்பில் கிளப்பி விடப்படும் புரளி; அதில் எந்த உண்மையும் இல்லை.ஜமேஷா முபின், ஜாக்ரன் ஹாஸ்மி உள்ளிட்டோருக்கும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத், பல மாநாடுகளை நடத்தியுள்ளது. ஒரு இடத்திலும் சட்டம், ஒழுங்கு பிரச்னை எழுந்ததில்லை; சிறு சலசலப்பு கூட எழுந்ததில்லை.மாநாடு முடிந்ததும், அந்த இடத்தை சுத்தம் செய்து கொடுத்து விட்டுதான், ஒவ்வொரு முறையும் வெளியேறி இருக்கிறோம். பா.ஜ.,வின் விமர்சனங்களில் கவனம் செலுத்தி, நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.



- நமது நிருபர் --

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X