வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : மத்திய உயர்கல்வி துறை செயலர் சஞ்சய் மூர்த்தி, பள்ளிக் கல்வித்துறை செயலர் சஞ்ஜய்குமார் ஆகியோர் கூறியதாவது: 'கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு' என்ற தலைப்பிலான கருத்தரங்கில், பள்ளிக் கல்வி, உயர் கல்வி, திறன் மேம்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
தேசிய கல்விக் கொள்கை, திறன் மேம்படுத்தும் பள்ளிக் கல்வியில் இருந்து துவங்குகிறது. பள்ளியில் இடைநிற்றலை குறைத்தல், பள்ளிக் கல்வி, தொழில்கல்வியை மேம்படுத்த, திறன் மேம்பாட்டு பயிற்சி தருதல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து, அடுத்தடுத்த நாட்களில் நடக்கும் கல்வி செயற்குழு கூட்டத்தில் பேசப்படும்.
தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, கல்வி நிறுவனங்கள் செயல்படுவதுதான் வருங்கால தேவையாக இருக்கும். அனைத்து பிராந்திய மொழிகளிலும், மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வி வழங்கப்படும்.
வரும், 2025ம் ஆண்டுக்குள் குறைந்த பட்சம், 50 சதவீத பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அது, 2030க்குள், 100 சதவீதமாக வேண்டும். இது தான் தேசிய கல்வி கொள்கையின் நோக்கம்.
![]()
|
திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான, தமிழக அரசின், 'நான் முதல்வர் திட்டம்' சிறப்பாக செயல்படுகிறது. இது போன்று, மற்ற மாநிலங்களும் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இந்த சந்திப்பின்போது, திறன் மேம்பாட்டு கல்வி செயலர் அதுல் குமார் திவாரி, ஏ.ஐ.சி.டி.இ.,யின் முன்னாள் தலைவர் அனில் சஹஸ்ரா புதே உடனிருந்தனர்.