ஜெயலலிதா சொத்தில் உரிமை: சகோதரர் எனக் கூறி முதியவர் வழக்கு

Updated : பிப் 01, 2023 | Added : பிப் 01, 2023 | கருத்துகள் (22) | |
Advertisement
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்தில், தனக்கும் உரிமை உள்ளது எனக்கூறி, மைசூரைச் சேர்ந்த முதியவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.கர்நாடக மாநிலம், மைசூரைச் சேர்ந்த என்.ஜி.வாசுதேவன், 83, என்பவர் தாக்கல் செய்த மனு: என் பெற்றோர் ஜெயராம் - ஜெயம்மா. இவர்களுக்கு நான் மட்டுமே வாரிசு. வேதவல்லியை, இரண்டாவதாக என் தந்தை திருமணம் செய்தார். அவர்களுக்கு,
Jayalalitha, Vasudevan,  Chennai High Court,ஜெயலலிதா, வாசுதேவன், சகோதரர், சென்னை, சென்னை உயர் நீதிமன்றம், Madras High Court, Chennai,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்தில், தனக்கும் உரிமை உள்ளது எனக்கூறி, மைசூரைச் சேர்ந்த முதியவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கர்நாடக மாநிலம், மைசூரைச் சேர்ந்த என்.ஜி.வாசுதேவன், 83, என்பவர் தாக்கல் செய்த மனு: என் பெற்றோர் ஜெயராம் - ஜெயம்மா. இவர்களுக்கு நான் மட்டுமே வாரிசு. வேதவல்லியை, இரண்டாவதாக என் தந்தை திருமணம் செய்தார். அவர்களுக்கு, ஜெயகுமார், ஜெயலலிதா பிறந்தனர். அதனால், எனக்கு, அவர்கள் இருவரும் சகோதர, சகோதரி ஆவர். கடந்த, 1950ல், என் தந்தையிடம் ஜீவனாம்சம் கேட்டு, மைசூரு நீதிமன்றத்தில் என் தாயார் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் இருக்கும்போது, தந்தை இறந்ததால், வேதவல்லி மற்றும் அவரது வாரிசுகள் ஜெயகுமார், ஜெயலலிதா ஆகியோரை, பிரதிவாதிகளாக சேர்த்திருந்தார். இந்த வழக்கு சமரசத்தில் முடிந்து விட்டது.



latest tamil news

ஜெயலலிதா இறப்புக்கு முன், ஜெயகுமார் இறந்து விட்டார். சகோதரர் என்ற முறையில், நான் நேரடி வாரிசு. எனவே, ஜெயலலிதாவின் சொத்துக்களில், பாதியை நான் பெற உரிமை உள்ளது. தீபா, தீபக் தான் சட்டப்பூர்வ வாரிசு என்ற உயர் நீதிமன்ற உத்தரவை, 'வாபஸ்' பெற வேண்டும். தாமதமாக தாக்கல் செய்யும் இந்த வழக்கை, விசாரணைக்கு ஏற்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.



இவ்வழக்கின் ஆதார ஆவணங்கள் பெறுவதற்காக, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் கோர்ட்டில், வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க தீபா, தீபக் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, வரும் 20ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

Ellamman - Chennai,இந்தியா
01-பிப்-202322:16:50 IST Report Abuse
Ellamman புத்திகூர்மை ரொம்போ ரொம்போ அதிகம். அதனால தான் இப்படி புதுசு புதுசா பூதம் கிளம்புது. ...எல்லாபூதத்தையும் பரம்பரை பரம்பரையா உள்ளே வாங்கிக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
01-பிப்-202322:14:47 IST Report Abuse
Ellamman இன்னும் எத்தனை இடங்களில் விட்டகுறை தொட்டகுறைய வெச்சிட்டு போய் இருக்கா இந்த மகராசி? அப்பப்பா ...இவரோட காலில விழுந்து எழுந்த ஆசாமிகளை நினைச்சா தான் விழுந்து விழுந்து சிரிக்க தோணுது. எப்படிப்பட்ட பாவங்களை தங்கள் கணக்குல எழுதிக்கொண்டிருக்கிறார்?
Rate this:
Cancel
01-பிப்-202317:34:07 IST Report Abuse
dinesh     chennai ஜெயலலிதா அம்மா கஷ்ட படும் காலங்களில் இந்த பெரியவர் எங்கு இருந்தார் •• ஜெயலலிதாவிற்கு என்ன உதவிகள் செய்தார் •• இப்போது மட்டும் சொத்தில் பங்கு கேக்க வருகிறார் ••
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X