சென்னை : முதல்வர் ஸ்டாலின் இன்று காலை ரயிலில் வேலுார் செல்கிறார்.
'கள ஆய்வில் முதல்வர்' என்ற புதிய திட்டத்தை துவக்கி வைத்து, இன்று முதல் முதல்வர் ஸ்டாலின், மாவட்டங்களுக்கு கள ஆய்வு செல்ல உள்ளார். முதல் கட்டமாக, இன்று முதல் இரண்டு நாட்கள், வேலுார் மண்டலத்தில் உள்ள, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை மாவட்டங்களில், ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
இதற்காக இன்று காலை 10:15 மணிக்கு சாய்நகர் ஷீரடி விரைவு ரயிலில், வேலுார் செல்கிறார். இரண்டு நாள் ஆய்வு முடிந்து, நாளை மாலை 6:30 மணிக்கு பிருந்தாவன் விரைவு ரயிலில், சென்னை திரும்புகிறார்.