பழநி கும்பாபிஷேகத்தில் ஆகம விதிமீறல்: தி.மு.க., அரசுக்கு ஹிந்து முன்னணி கண்டனம்

Updated : பிப் 01, 2023 | Added : பிப் 01, 2023 | கருத்துகள் (30) | |
Advertisement
கோவை: பழநி மலைக்கோவில் கும்பாபிஷேகத்தில் ஆகம விதிகளை மீறியுள்ளதாக தி.மு.க., அரசுக்கு, ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை: பழநி தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேக விழாவில், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், போலீசார் தங்களால் முடிந்த அளவுக்கு விதிகளை மீறி, சொந்த வீட்டு விசேஷம் போல நடத்தினர். இது, பக்தர்களுக்கு
Palani kovil, Kumbabhishekam,Kadeswara Subramaniam,பழநி கோவில், கும்பாபிஷேகம், திமுக, காடேஸ்வரா சுப்பிரமணியம், பழநி தண்டாயுதபாணி, Coimbatore, DMK,  Palani Thandayuthapani, கோவை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

கோவை: பழநி மலைக்கோவில் கும்பாபிஷேகத்தில் ஆகம விதிகளை மீறியுள்ளதாக தி.மு.க., அரசுக்கு, ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை: பழநி தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேக விழாவில், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், போலீசார் தங்களால் முடிந்த அளவுக்கு விதிகளை மீறி, சொந்த வீட்டு விசேஷம் போல நடத்தினர். இது, பக்தர்களுக்கு வேதனையை தந்துள்ளது. ஏழு கால பூஜையின்போது மந்திர கோஷங்கள் மலையை தவிர கீழே இருப்பவர்களுக்கு கேட்காத வகையில் ஒலிபெருக்கிகள் துண்டிக்கப்பட்டன. மக்கள் அதிகளவில் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தின் காரணமாக ஒலிபெருக்கிகள் துண்டிக்கப்பட்டன. தமிழகத்தின் முக்கியமான கோவிலில் வேதமந்திரங்கள் முழங்கவில்லை.latest tamil news

தமிழில் கூட சரியான மந்திரங்கள் முழங்காத அளவுக்கு பார்த்துக் கொண்டனர். தி.மு.க., அரசு, ஹிந்து மத நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் பொய்யாக்க நினைப்பதே இதற்கு காரணம். கருவறைக்குள் அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் சுமார், 400 நபர்கள் சென்று மூலவரை காட்சிப்பொருளாக பார்க்க அனுமதிக்கப்பட்டனர். கருவறைக்குள் பெண்கள் போகக் கூடாது. ஆனால், அமைச்சர் சக்கரபாணியின் மனைவி மற்றும் பல பெண்கள் கருவறைக்குள் சென்று வந்தனர்; இது மிகப்பெரிய ஆகம விதிமீறல். இது, தமிழகத்தில் நடக்கும் ஆட்சிக்கு மிகப்பெரும் ஆபத்து விளைவிக்கும்.latest tamil news

கோவிலில் நடந்த ஆகம விதிமீறலால், தமிழக மக்களுக்கும் தீங்கு விளையக்கூடிய சம்பவங்களை 'திராவிட மாடல்' அரசு செய்துள்ளது; இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பொது மக்கள், உள்ளூர் பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காணமுடியவில்லை. பழநி போகர் பூஜை செய்யக்கூடிய புலிப்பாணி வாரிசான, புலிப்பாணி பாத்திர சுவாமிகளை முறையாக அழைத்து கும்பாபிஷேகம் நடக்கவில்லை. பல ஆதீனங்களையும் கும்பாபிஷேகத்துக்கு அனுமதிக்கவில்லை. மந்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆகம விதிமீறலுக்கு அங்கு பணிபுரியும் ஆச்சாரியார்கள், தலைமை குருக்கள் ஆளும் கட்சிக்கு உடந்தையாக இருந்தது மிகவும் வேதனைக்குரியது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (30)

RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
01-பிப்-202314:35:33 IST Report Abuse
RaajaRaja Cholan சில்லறை பயலுக, தகுதி இல்லாத தற்குறிகள் முன்னாள் ரௌடிகள் அரசு பொறுப்பை ஏற்றால் இப்படி தான், இவனுகெலுக்கு தான் சாமி நம்பிக்கை இல்லையே அப்புறம் என்ன இதுக்கு குடும்பத்தை கூட்டி போரானுங்க, இவன் இப்படி பண்ணியதால் தான் இவர்கள் வீட்டு பெண்கள் இவன் சொல்வதை கேட்காமல் தனது சுயமரியாதையை காப்பாற்றிக்கொண்டது
Rate this:
sridhar - Chennai,இந்தியா
01-பிப்-202322:00:45 IST Report Abuse
sridharமுன்னாள் ரௌடி என்று இழிவு படுத்தாதீர்கள் , இன்னமும் அவர் ரௌடி தான்....
Rate this:
Cancel
NALAM VIRUMBI - Madurai,இந்தியா
01-பிப்-202313:27:42 IST Report Abuse
NALAM VIRUMBI எப்படியோ ஒரு வழியா இந்த அரசு தொலையட்டும். முருக பெருமான் பார்த்துக்கொள்வார். அக்கிரமம் அதிக நாட்கள் நீடிக்காது. இது இயற்கையின் நியதி
Rate this:
Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா
01-பிப்-202320:59:27 IST Report Abuse
Sathyasekaren Sathyanarayananaஆமாம் முருக பெருமான் பார்த்துக்கொள்வார். ஆனால் முட்டாள் இந்துக்கள் மட்டும் ரூபாய் இரண்டாயிரத்திக்கு ஆசைப்பட்டு, இந்து விரோதி கோவிலை இடிப்பான். அந்நிய மத கைக்கூலிகள், இந்துமத பெயரில் உலவும் மதம் மரியா கிரிப்டோ என்று தெரிந்தும் வோட்டை போடுவார்கள். குறை நம் மீது தன. என்று ஜாதி மறந்து இந்து என்று ஒற்றுமையாக வோட்டை போடுகிறார்களா அது வரை இந்த கொள்ளைக்காரர்கள் அட்டூழியம் தொடரும்....
Rate this:
Cancel
01-பிப்-202312:15:39 IST Report Abuse
மதுமிதா விதியே தெரியாது நிதி தெரியும் ஆய்வு நடத்தும் அதிசய விஞ்ஞானிகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X