புதுடில்லி: லோக்சபாவில் மத்திய பட்ஜெட் இன்று (பிப்.,1) தாக்கல் செய்யப்படுவதால் டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. இதையடுத்து இன்று காலை, 11:00 மணிக்கு லோக்சபாவில், 2023 - 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில் ஜனாதிபதியுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு நடத்தினார்.
ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு பிறகு நிதியமைச்சர் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று பட்ஜெட் 2023-24க்கு ஒப்புதல் பெறுவார்.