புதுடில்லி: லோக்சபாவில், 2023 - 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவர் ஒன்றரை மணி நேரம் உரை ஆற்றினார்

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. இதையடுத்து இன்று(பிப்.,01) காலை, 11:00 மணிக்கு லோக்சபாவில், 2023 - 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
சில துளிகள்..
* பார்லி.,யில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், நிர்மலா சீதாராமனுக்கு 5வது பட்ஜெட்டாகும்.
* மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு இது தொடர்ச்சியான 10வது பட்ஜெட்.
* நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் மூன்றாவது முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

சிவப்பு
* வழக்கமாக பட்ஜெட் குறித்த முக்கிய தகவல்கள் அடங்கிய கோப்புகளை சூட்கேஷில் எடுத்து வருவதே வழக்கம். ஆனால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுவரை தாக்கல் செய்த 4 பட்ஜெட்களின் போது, சிவப்பு நிற வெல்வெட் துணியில் வைத்து லெட்ஜராக எடுத்து வந்துள்ளார். அதேபோல் தான் இம்முறையும் சிவப்பு நிற வெல்வெட் துணியால் ஆன பையில் பட்ஜெட் ஆவணங்கள் அடங்கிய ‛டேப்' எடுத்து வந்தார்.