பட்ஜெட் 2023

POWERED BY

7 முக்கிய அம்சங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் : நிர்மலா சீதாராமன்

Updated : பிப் 01, 2023 | Added : பிப் 01, 2023 | கருத்துகள் (13) | |
Advertisement
புதுடில்லி: ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைசி நிலை வரை வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட 7 முக்கிய அம்சங்களுக்கு இந்த பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் இன்று (பிப்.,1) தாக்கல் செய்தார். தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன்
Budget2023, Union Budget 2023, Nirmala Sitharaman, பட்ஜெட் 2023, மத்திய பட்ஜெட், நிர்மலா சீதாராமன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைசி நிலை வரை வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட 7 முக்கிய அம்சங்களுக்கு இந்த பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் இன்று (பிப்.,1) தாக்கல் செய்தார். தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரையாற்றியதாவது:



* கடந்த பட்ஜெட்கள் அமைத்த அடித்தளத்தின் மீது கட்டப்படும் பட்ஜெட்டாக இது அமையும்.


* உலக பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரமாக இந்தியா விளங்குகிறது.


* நடப்பாண்டில் இந்தியா 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை காணும்; மற்ற நாடுகளை விட இது அதிகம் ஆகும்.


* இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருப்பதை உலக நாடுகள் ஒப்புக்கொள்கின்றன.


* இதர பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள், அனைவருக்கும் ஏற்ற பட்ஜெட்டாக இது இருக்கும்.


* உலக பொருளாதார தரவரிசையில் 10வது இடத்தில் இருந்து இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியது.


* கடந்த 9 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது.


* உஜ்வாலா திட்டத்தில் 9.6 கோடி சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.


latest tamil news

* பிரதமரின் காப்பீடு திட்டங்களால் 44 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.


* பிரதமரின் கிசான் திட்டத்தில் 11.4 கோடி விவசாயிகளுக்கு 2.2 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளது.


* உணவு தானிய விநியோகத்திற்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


* தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 11.75 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.


* பசுமை எரிசக்தி மற்றும் பசுமை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


* ஜி20 நாடுகளின் மாநாட்டில் இந்தியா தலைமையேற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம்


* 44.6 கோடி மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.


* ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைசி நிலை வரை வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு, தேசத்தின் வளங்களை பயன்படுத்துதலுக்கு முக்கியத்துவம், பசுமை வளர்ச்சி, இளைஞர்களின் ஆற்றல், நிதித்துறை வளர்ச்சி ஆகிய 7 முக்கிய அம்சங்களுக்கு இந்த பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.


* உலகிலேயே அதிகளவில் சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது.


* விவசாய வளர்ச்சியை அதிகரிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.


* ஐதராபாத்தில் சிறுதானியங்கள் ஆராய்ச்சிக்காக தனி நிறுவனம் உருவாக்கப்படும்.


* நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் குறித்த தரவு தளம் உருவாக்கப்படும்.


* தற்போதுள்ள மருத்துவ கல்லூரிகளுடன் சேர்ந்து 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும்.


* விவசாய விளைபொருட்களை சேமிக்க பரவலாக்கப்பட்ட சேமிப்பு மையங்கள் அமைக்கப்படும்.


இவ்வாறு அவர் உரையாற்றினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

hari -  ( Posted via: Dinamalar Android App )
01-பிப்-202313:53:20 IST Report Abuse
hari என்னமா கதறுறன்.... சந்தோஷமா இருக்கு ஹி ஹீ நன்றி தினமலர்
Rate this:
Cancel
சாமிநாதன்,மன்னார்குடி திமுக உபிஸ்கள் வயித்தெரிச்சலடைந்து அவன்களை வெறுப்பேற்றும் படியான மிகவும் அருமையான பட்ஜெட். நிதியமைச்சருக்குவாழ்த்துக்கள்!
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
01-பிப்-202312:53:57 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வருமானவரி வரம்பு அதிகரிக்கும்ன்னு காத்திருந்தவனுங்களுக்கு அல்வா அன்னிக்கே கிண்டிட்டாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X