வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1924 முதல் ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை மாற்றி கடந்த 2017ம் ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட்டை, பொது பட்ஜெட்டுடன் இணைத்து மத்திய பா.ஜ., அரசு தாக்கல் செய்து வருகிறது.
அந்த வகையில் இன்று (பிப்.,1) தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இது 2013-14ம் ஆண்டை ஒப்பிடுகையில் 9 மடங்கு அதிகமாகும்.